Wednesday , October 16 2019

அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதிக்கு சிலை: சிலை அமைக்கப்பட்டதும் உடைக்கப்பட்டதும் ஒரு பார்வை

mk-statue

  ஏற்கெனவே கருணாநிதிக்கு சிலை வைத்த திராவிடர் கழகம் மீண்டும் அவருக்கு அதே இடத்தில் சிலை வைக்கும் என்று அக்கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சிலை அமைக்கப்பட்டது, பின் உடைக்கப்பட்டது குறித்த ஒரு பார்வை. கருணாநிதி நினைவிடம் நோக்கி திராவிடர் கழகம்  சார்பில் அமைதிப் பேரணி கி.வீரமணி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் மீண்டும் சிலை வைப்பது குறித்து பேசிய கி.வீரமணி, ” திராவிடர் கழகம்தான் கருணாநிதிக்கு அண்ணா …

Read More »

காவல் துறையிலேயே விஷாகா கமிட்டி இல்லையா?- கனிமொழி அதிர்ச்சி

kanimozhi

  பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட விஷாகா கமிட்டி, சட்டத்தை அமல்படுத்தவேண்டிய காவல்துறையிலேயே இல்லை என்பது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட விஷாகா என்ற பெண் நீதிகேட்டு வழ்க்கு தொடர்ந்தார். அவரது வழக்கு விசாரணை முடிந்து வெளியான தீர்ப்பில், வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதைத் தவிர்க்கச் சட்டம் இயற்றப்பட வேண்டும் …

Read More »

திருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா? அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

Stalin11

திருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா? அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் திருமுருகன் காந்தி மீது ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கினை தூசு தட்டி எடுத்து கைது செய்து சிறைக்கு அனுப்பியிருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி ஐ.நா. மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு …

Read More »

நெருக்கடியான நேரத்தில் கலங்காத குணம் ஸ்டாலினிடம் இருந்தது என்கிறார் மியாகான்

stalin23

  கலைஞருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வருகையின் போது சிரம் பணியாமல் நிமிர்ந்து நின்று அஞ்சலியை ஏற்றுக்கொண்டது தி.மு.க. செயல் தலைவருக்கு பெருமை சேர்த்தது. மிகச் சோதனையான நேரத்திலும் சிக்கலான பிரச்சினைகளை மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் எதிர்கொண்டது அவருடைய பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. 2010-ஆம் ஆண்டு அவர் துணை முதல்வராக தேர்வானதும் இந்தியா டுடே வார இதழ் வெளியிட்ட சிறப்பு மலரில் அவர் பள்ளி நாட்களைப் பற்றிய என் …

Read More »

கருணாநிதி இல்லாத திமுகவில் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள்

MK-Stalin-11

கருணாநிதி இல்லாத திமுகவில் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள் அண்ணா, கருணாநிதி என்ற மாபெரும் வரலாற்று நாயகர் களுக்கு அடுத்து, திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்க இருக் கிறார் மு.க.ஸ்டாலின். அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ல் முதல்வரான கருணாநிதி யிடம் கட்சித் தலைவர் பதவியும் வந்து சேர்ந்தது. அதுமுதல் கடந்த 7-ம் தேதி மறையும் வரை 49 ஆண்டுகளுக்கு திமுக தலைவராக இருந்தார் கருணாநிதி. இந்த 49 ஆண்டுகளில் 19 ஆண்டு கள் …

Read More »

ஆரூரில் தோன்றி அகிலம் ஆண்ட தலைவர்

Karunanidhi224

ஆரூரில் தோன்றி அகிலம் ஆண்ட தலைவர் கருணாநிதி என்று ஆரூர் தாஸ் கூறியுள்ளார்.   1942-ம் ஆண்டு… எனக்கு 11 வயது. அப்போது திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் நான் 6-ம் வகுப்பு படித்தேன். அதே பள்ளியில் கலைஞர் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். அவர் என்னை விட 7 வயது மூத்தவர். பள்ளியில் படிக்கும்போதே திராவிட மாணவர் கழக தலைவராக இருந்தார். தனது 18-வது வயதிலேயே முரசொலியைத் தொடங்கிவிட்டார். அப்போது கையெழுத்து பிரதியாக அதை …

Read More »

கருணாநிதி பற்றி குஷ்பு : “அவர் கேட்டிருக்கலாம்… நானும் சொல்லியிருக்கலாம்!”

Khusphu

  ‘‘கலைஞர் எனக்கு அப்பாவாகத்தான் பழக்கம். அவரை நான் 1991-ம் ஆண்டுதான் முதல் முறையாகப் பார்த்தேன். ‘சின்னதம்பி’க்கு அடுத்த படம் ஷூட்டிங், சென்னையிலிருந்து ஈரோடுக்கு ரயில்ல போயிட்டிருக்கோம். டைரக்டர் பி.வாசு சார் என்கிட்ட வந்து, ‘பக்கத்து கம்பார்ட்மென்ட்ல கலைஞர் இருக்காரு. நீ அவரைப் பார்த்திருக்கியா?’னு கேட்டார். ‘இல்ல’னு சொன்னதும், கலைஞர் ஐயாகிட்ட அழைச்சிட்டுப் போய் என்னை அறிமுகப்படுத்தி வெச்சாங்க!” – அத்தனை நினைவாக கருணாநிதியை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தைச் சொல்கிறார் …

Read More »

தனக்கென ஒரு கொள்கை, தனக்கென ஒரு தலைவன் என்று கலைஞரின் வாழ்க்கை:-எம்.ஜி.ஆர்

MGR-karuna

‘தனக்கென ஒரு கொள்கை, தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக் கொண்டு பற்றோடும் பிடிப்போடும் அயராது உழைத்து வருபவர் கலைஞர். கொள்கைப் பிடிப்பு சார்ந்து அண்ணாவோடும் சரி, என்னோடும் சரி; வாதிடுவதற்கு அவர் எப்போதுமே தயங்கியதில்லை. கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் முனைந்து செயலாற்றுவதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் கிடையாது. சிலருக்குப் பதவி கிடைத்தால், நாடு குட்டிச்சுவராகி விடுகிறது. நமது கலைஞருக்குப் பதவி …

Read More »

காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை

thayalu-ammal

காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் அழைத்து வரப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 27-ம் தேதி இரவு ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த சில மணி நேரத்தில் உடல் நலம் சீரானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல்நலம் கடந்த 29 ஞாயிற்றுக்கிழமை …

Read More »

கருணாநிதியை ஜனாதிபதி நேரில் பார்த்தார் உடல் நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்

president-with-stalin

கருணாநிதியை ஜனாதிபதி நேரில் பார்த்தார் உடல் நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல்நல குறைவின் காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில …

Read More »