Thursday , July 18 2019

தமிழக அரசு டெண்டர்களை நேரடியாக பெறுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

mk-stalin1

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஆன்-லைன்’ டெண்டருக்கு பதில், தன் சொந்த மாவட்டமான சேலம் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டார அலுவலகங்களில், டெண்டர்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நெடுஞ்சாலைத்துறையில் இணையவழி டெண்டர் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்ற முதல்-அமைச்சர் இப்போது, ஆன்-லைனை தவிர்த்து விட்டு, டெண்டர்களை …

Read More »

கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை அரசு: பாஜக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

mk-stalin

  அருண் ஜேட்லி விவகாரத்தில் உண்மை வெளிவரவேண்டும், இல்லாவிட்டால் ஜேட்லி நீக்கப்படவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா, “நான் நாட்டை விட்டு கிளம்பும் முன் கடன்களை செட்டில் செய்வது குறித்து பேச நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தேன் இதுதான் உண்மை. என்று கூற ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் மல்லையாவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.   இதற்கு மறுப்பு தெரிவித்த …

Read More »

மின் பகிர்மானக் கழகத்தையே இருட்டுக்குள் தள்ளியிருக்கிறார் அமைச்சர் தங்கமணி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Stalin12

  வெளிச்சம் தரும் மின் பகிர்மானக் கழகத்தையே இருட்டுக்குள் தள்ளியிருக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாகக் கைவிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்று வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. …

Read More »

வரலாறு காணாத ஊழல்; எஸ்பி வேலுமணி மீது ஸ்டாலின் பாய்ச்சல்: பத்திரிகையாளர்களை மிரட்டுவதற்கு கண்டனம்

mk-stalin1

  வரலாறு கண்டிராத மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடக்க அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: “உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை …

Read More »

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பாஜகவும் அ.தி.மு.கவும் கைகோர்த்து செயல்படுகிறது: ஸ்டாலின் கண்டனம்

MK-Stalin-11

  ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசும் – மாநில அ.தி.மு.க அரசும் கைகோர்த்து செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது; மத்திய அரசின் “நீர் ஆய்வு” அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை” என்று …

Read More »

தூத்துக்குடி நிலத்தடி நீர் ஆய்வு பற்றிய மத்திய நீர்வளத்துறை அறிக்கை : ஸ்டாலின் கண்டனம்

stalin26

தூத்துக்குடி நிலத்தடி நீர் ஆய்வு பற்றிய மத்திய நீர்வளத்துறை அறிக்கைக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய நீர்வளத்துறை அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வலியுறுத்தியுள்ளார். மேலும் தனியார் ஆலைக்காக ஏழரைக்கோடி தமிழ் மக்களின் நலனை மத்திய பாஜக அரசு தூக்கி எரித்துள்ளதாக தெரிவித்தார்.

Read More »

ஸ்டாலின் தலைவரான நிலையில் முதல்முறையாக சென்னையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம்: மக்களவைத் தேர்தல், மு.க.அழகிரி விவகாரம் பற்றி ஆலோசனை

anna-arivalyam

  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறை யாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக் கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவல கமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக் கிறார். பொதுச்செயலாளர் க.அன் பழகன், பொருளாளர் துரைமுரு கன், 65 மாவட்டச் …

Read More »

27 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்க: ஸ்டாலின்

Stalin11

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை அண்மையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்நிலையில் …

Read More »

ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி – ஸ்டாலின் கண்டனம்

Hydro-carban-case

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் சுமார் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தமுள்ள 55 இடங்களில் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனமும்  இரண்டு இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனமும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது. இவற்றில் மூன்று இடங்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் 2 இடங்களை …

Read More »

திருக்குவளையில் கருணாநிதியின் சொந்த வீட்டில் ஸ்டாலின்: உருக்கமான பதிவு

mk-stalin-letter

  திருக்குவளையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த வீட்டின் வருகைப் பதிவில் ஸ்டாலின் தன் நினைவுகளைப் பதிவு செய்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்றார். திமுக தலைவரான பிறகு தன் தந்தையின் சொந்த ஊரான திருக்குவளைக்கு மு.க.ஸ்டாலின் செல்வது இதுவே முதல்முறை. திருக்குவளையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். …

Read More »