Saturday , May 25 2019
Home / தி.மு.க. (DMK) செய்திகள் / ஸ்டாலினுக்கு அறுவை கிகிச்சை; நீர்க்கட்டி அகற்றம்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை
Fresa Technologies

ஸ்டாலினுக்கு அறுவை கிகிச்சை; நீர்க்கட்டி அகற்றம்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை

 

ஸ்டாலினுக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் கடந்த 7-ம் தேதி காலமானார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக தலைவரானார்.

 M k Stalin101

ஸ்டாலின் கட்சிப் பணிகள், பொதுக்கூட்டங்கள், தொடர் பிரச்சாரங்கள், கருணாநிதி அஞ்சலிக் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இடையறாது இயங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று மருத்துவர்கள் சார்பில் நடத்தப்பட்ட கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பின்னர், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்று ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ”திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வலது தொடையில் இருந்த சிறிய அளவிலான நீர்க்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து ஸ்டாலின் இன்று பிற்பகல் வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனை சென்று ஸ்டாலினின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்தார்.

Fresa Technologies

About musthafa

Check Also

tamil eelam

‘வரலாறு தெரியாத தமிழிசை வாய் திறக்கக்கூடாது’: திமுக கண்டனம்

  கறைபடிந்த ராஜபக்‌சேவின் கரங்களை அங்கு சென்று முகர்ந்தாரே மோடி? அதே ராஜபக்‌சேவையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு …