Saturday , May 25 2019
Home / தி.மு.க. (DMK) செய்திகள் / பாஜவுடன் ரகசிய உடன்பாடு இல்லை: நேரு
Fresa Technologies

பாஜவுடன் ரகசிய உடன்பாடு இல்லை: நேரு

பாஜவுடன் ரகசிய உடன்பாடு இல்லை: நேரு

திமுக மீது சிறுபான்மை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைப்பதற்காக திமுகவுக்கும், பாஜகவுக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது என அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, திமுகவுக்கும், பாஜகவுக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது என அவர் கூறியுள்ளார். விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தம்பிதுரை தனியாகச் சந்தித்துப் பேசினார் என்பதற்காக அவருக்கும், திமுகவுக்கும் ரகசிய உடன்பாடு எனக் கூறலாமா? திமுக மீது சிறுபான்மை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைப்பதற்காக தம்பிதுரை இப்படி பேசுகிறார். வரக்கூடிய தேர்தலில் அவரைப் பார்த்துக் கொள்வோம்.

 KN Nehru1

கொள்ளிடம் மேலணை உடைப்பை சரிசெய்ய இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் செலவு செய்துவிட்டனர். ஆனாலும் முழுமையாக சீரமைக்க முடிய வில்லை. திருச்சியில் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி என 2 அமைச்சர்கள் உள்ளனர். இதில் அமைச்சர் வளர்மதி தொகுதியில்தான் முக்கொம்பு உள்ளது. அணை சீரமைப்பை மேற்பார்வையிட கரூரில் இருந்து மற்றொரு அமைச்சர் வருகிறார். திருச்சியில் உள்ள அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்றார்.

Fresa Technologies

About musthafa

Check Also

Stalin11

ரபேல் ஒப்பந்தம்; மக்களுக்கு விளக்கம் அளிப்பது மோடியின் கடமை: ஸ்டாலின்

  ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரபேல் …